--- --:--:-- --

கோவையில் முதியோர் நலம் சார்ந்த தேசிய மாநாடு..!

8

முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

 

“இளைய தலைமுறையினரை இணைத்தல் முதுமை, உள்ளாக்கம் மற்றும் அதிகாரமளித்தல்” என்ற தலைப்பில் தேசிய மாநாடு மற்றும் பயிற்சி கருத்தரங்கத்தை இந்திய அரசின் சமூக நலத்துறை சார்பில் இயங்கும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லூரி இணைந்து கல்லூரி அரங்கில் நடத்தினர்.

 

விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கர்னல் ஆச்சல் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். முன்னதாக விழாவில் கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது. முன்னதாக பேசிய கல்லூரியின் செயலர் யசோதா தேவி,இந்த நிகழ்ச்சி முதியோர் அனைவர்க்கும் தனித்துவமான கற்றல் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீதரன் பேசியதாவது: இந்தியாவில் வேகமாக மாறும் மக்கள் தொகை பரிணாமத்தை கருத்தில் கொண்டு நிகழும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 2050-ம் ஆண்டிற்கு பின்னர், முதியோர் என மக்கள் தொகை இரட்டிப்பாக உயரும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிகழ்ச்சி மூலம் முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தங்களது தாத்தா பாட்டிகளுடன் கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இரண்டு நாட்களாக நடைபெறும் நிகழ்ச்சியில் முதுமையைப் பற்றிய தவறான நம்பிக்கைகள், முழுமையான உடல் மற்றும் மனநலம், ஊட்டச்சத்து மற்றும் இயக்கத்திறன், டிஜிட்டல் பயன்பாடு, நிதிப்பதுகாப்பு போன்ற தலைப்புகளில் முன்னணி நிபுணர்கள் சிறப்புரை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon