--- --:--:-- --

நடுவழியில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் சேவை சீரானது!

10

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இந்தச் சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

 

ரயில் திடீரென நடுவழியில் நின்றதால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் தவிப்பிற்கு ஆளானார்கள். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் சீரானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon