--- --:--:-- --

காரைக்காலில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை!

9

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon