அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை அடிக்கடி உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதால் சாமானிய மக்கள் வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையில் நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
அந்த வகையில் அக்டோபர் 20ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று அக்டோபர் 21ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,180-க்கும், சவரனுக்கு மட்டுமே ரூ.2,080 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.97,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,060க்கும், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.188க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





