பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்
வெளிநாட்டு ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி வட இந்தியாவிற்கு வந்து இப்போது 15க்கும் மேற்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது. ஒவ்வொரு சீசனிற்கும் TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா பக்கம் அதுவும் முக்கியமாக தமிழில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசன் படு பயங்கர கலவரத்துடன் ஒளிபரப்பானது, ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.
முதல் சீசன் பெரிய வெற்றி கொடுக்க அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 7வது சீசன் ஒளிபரப்பாகிறது. இந்த சீசன் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத மாற்றங்களாக நடந்து வருகிறது. பலர் வெளியே போக சிலர் உள்ளே வர என நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடுகிறது.
இந்த நிலையில் முதல் சீசனில் நடந்தது போலவே பிக்பாஸ் 7 சீசனிலும் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து கூல் சுரேஷ் தப்பிக்க முயன்றுள்ளார். அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் என்ன ஆனது, திடீரென ஏன் இந்த முடிவு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.





