12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர்.!
தர்மபுரி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஊழியரான விக்னேஷ் குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த டிசம்பர் மாதம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று ரகசியமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் மாணவி அவரது வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
தற்போது சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு விக்னேஷ் குமார் தகராறு செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




