11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்..!
தஞ்சை அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்ட ஆடுதுறையைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு 11 வயது சிறுமி சில்லரை மாற்றுவதற்காக வந்துள்ளார். அப்போது சிவக்குமார் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த சிறுமி சத்தத்தை கேட்டு வந்த சிறுமியின் பெற்றோர் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்க பதிவு செய்த காவலர்கள் சிவகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





