--- --:--:-- --

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து..!

4

மிழகத்தில் நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. நாளை பிளஸ் டூ தேர்வு, நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வும், பிளஸ் 1 தேர்வு வரும் 10-ஆம் தேதியும் தொடங்க உள்ளது . தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

 

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மாணவர்களை மதிப்பிடுவது தான் தேர்வுகள் என்றும் உங்களை மதிப்பிடுவது அல்ல என்பதைப் புரிந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 

Right Menu Icon