பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்..!
படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாணவர்களை நடத்துனர் உள்ளே வரச் சொன்னதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர். பரமக்குடி பகுதியில் தினசரி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் நின்றதால் நடத்துனர் மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்து தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





