--- --:--:-- --

திடீரென சாலையில் கவிழ்ந்த பேருந்து..!

1

கொல்கத்தாவில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. அதிகளவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தனியார் பேருந்தின் தகுதிச்சான்று 2018 ஆம் ஆண்டிலேயே காலாவதியான நிலையில் அதனை புதுப்பிக்காமல் இயங்கி வந்ததும் விசாரணையின் மூலமாக தெரியவந்துள்ளது.

Right Menu Icon