பேருந்தில் இருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்தில் இருந்து கீழே குதித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிணிகிரி பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் நவ்யாஸ்ரீ. சிரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை கெளமங்கலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு பேருந்தில் மாணவி வந்த நிலையில் சிணிகிரி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றம் அடைந்த மாணவி பேருந்தில் இருந்து கீழே குதித்த நிலையில் பலத்த காயங்களுடன் அந்த மாணவி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





