--- --:--:-- --

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பற்றி கூறிய சமந்தா..!

3

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். விக்னேசிவன் இயக்கும் காத்து வாக்கில ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமந்தா.

 

விக்னேஸ்வரனுக்கு ராசியான விஜய் சேதுபதிதான் ஹீரோ. காத்து வாக்கில ரெண்டு காதல் படம் இந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

 

இந்நிலையில் படம் குறித்து பேசிய சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து வேலை செய்ததை மறக்க முடியாது எனவும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

 

நயன்தாராவுடன் அனைத்து காட்சிகளிலும் அவருடன் சேர்ந்து வருவேன் என தெரிவித்தார் சமந்தா. இதைத்தொடர்ந்து காத்து வாக்கில ரெண்டு காதலுக்கான டப்பிங் வேலையை தொடங்கிவிட்டார் நயன்தாரா. அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஸ்சிவன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon