--- --:--:-- --

மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உப்புமாவில் கிடந்த பாம்புக்குட்டி..!

12

கர்நாடகாவில் உள்ள யாதகிரி பகுதியின் அரசு பள்ளி விடுதி ஒன்றில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உப்புமாவில் பாம்பு குட்டி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

யாதகிரி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி விடுதியில் இன்று காலை மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை சுமார் 52 மாணவர்கள் உண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.

 

அப்பொழுது பாம்பு குட்டி ஒன்று உணவுக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அனைத்து மாணவர்களும் யாதகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு யாதகிரி எம்எல்ஏ சென்று பார்வையிட்ட மாணவர்கள் உடல் நலம் விசாரித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon