மதுபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண்..!
கோவை ராமநாதபுரம் அடுத்த சாலையில் கடந்த புதன்கிழமை இரவு அதிவேகத்தில் வந்த கார் வாகனங்களின் மீது மோதி நின்றது. இதில் நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த என்ற யுக்திகா என்ற பெண் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இளம்பெண் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






