--- --:--:-- --

தமிழகத்தில் மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களை செயல்படுத்தக்கூடாது..!

7

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது உயிர்த்தியாகம் செய்த விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

 

இதைப்போல தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் நியூட்ரினோ போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்கிற உறுதியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் எனவும் எதிர்காலத்தில் வேளாண் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளே கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon