--- --:--:-- --

ஆன்லைன் விளையாட்டில் 3 லட்சம் ரூபாயை கொடுத்த மாணவன்..! தாய் அதிர்ச்சி..!

8

விளையாட்டில் ஈடுபட மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வீடியோ கேம் ஆயுதங்கள் வாங்கிய 12 வயது சிறுவனால் அவரது தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

சத்தீஸ்கர் மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது பங்குவங்கிக் கணக்கில் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மாயமாகி உள்ளதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

விசாரணையில் சுமார் 3 மாதங்களாக ஆசிரியையின் செல்போனை பயன்படுத்தி அவரது மகன் 278 பரிவர்த்தனைகள் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆன்லைன் விளையாட்டிற்கான ஆயுதங்களை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த பரிவர்த்தனைகளுக்கு ஓடிடி கேட்கப்படாததால் ஆசிரியைக்கு தனது பணம் செலவு அளிக்கப்படுவது தெரியாமல் போய் விட்டதாக சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon