பப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்..!
குழந்தையின் நலன் கருதி பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட உரையாடி பெண்களை கீழ்த்தரமாகவும் ஆபாசமாக பேசியும் யூடியூபில் பதிவேற்றம் செய்தது. சிறுவர், சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிணை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து மேலும் குழந்தையின் நலன் கருதி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.






