--- --:--:-- --

சொத்து தகராறில் பெற்ற மகனை அடித்து கொலை செய்த தாய்..!

9

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் அடுத்த பாசினாய பள்ளியைச் சேர்ந்தவர் கௌரம்மாள்.

 

இவரின் மகன் சுகுமார். இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுகுமாருக்கும் அவரது தாய்மாமன்களான சுப்பிரமணியம் மற்றும் திம்மராயனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த கௌரம்மாள் தனது தம்பிகளுடன் சேர்ந்து கொண்டு தன் மகனை கட்டை மற்றும் மண்வெட்டியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த தாய், தாய் மாமன்கள் என மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon