--- --:--:-- --

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 பேர் கைது..!

3

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கொடைக்கானலில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் பார்வை குறைபாடு உள்ளவர்.

 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது மகளுக்கும் சிறுவயது முதலே மது குடிக்க பழக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

 

மகளுடன் தனியாக இருந்த தேவதாஸ் மது வாங்கி வந்து கொடுக்கும் தாய்மாமன், கண்ணன் என்பவர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு மது போதையில் இருந்த சிறுமியை பல மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளாக்கிள்ளனர்.

 

இதையடுத்து நண்பர்களான குமாரும் மணிகண்டன் ஆகியோரும் தனித்தனியே பல மாதங்களாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த புகாரையடுத்து கொடைக்கானல் அடுத்த மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

சிறுமியின் மது பழக்கத்தினை பயன்படுத்தி அவருடன் தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு அளித்த கண்ணன் மணிகண்டன் மற்றும் குமார் ஆகியோர் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon