13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கண்ணுக்கு தெரியாத சிற்பம்..!
இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர் கண்களுக்கு தெரியாத சிற்பத்தை 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். சால்வெட்டா என்ற சிற்ப கலைஞர் ஐ அம் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
கண்களுக்கு புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என சால்வெட்டா அழைக்கிறார். இதனை சிற்பமாக ஏற்றுக் கொண்ட ஒருவர் இணையத்தில் இருந்து 13 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
4 முதல் 7 லட்சம் ரூபாய் வரை மட்டுமே விலை போகும் என எதிர்பார்த்த நிலையில் 13 லட்சம் ரூபாய்க்கு விலை போனது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.






