--- --:--:-- --

4 வது சுற்று முடிவில் திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக முன்னிலை..!

10.6

திருப்பூர் வடக்கு தொகுதி 4 வது ரவுண்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 16416 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி 8312 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி ஈஸ்வரன் 2670 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.

 

தாராபுரம் பாஜக வேட்பாளர் முருகன் 15186 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி 13624 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் 15325 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரையடுத்து திமுக வேட்பாளர் முத்துரத்தினம் 9432 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். உடுமலை தொகுதியின் 4 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் 14575 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தென்னரசு 4643 வாக்குகள் பின்தங்கி 9932 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

திருப்பூர் தெற்கு தொகுதி 4 வது ரவுண்டில் செல்வராஜ் 9 202 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் குணசேகரன் 154 ஓட்டுகள் பின்தங்கி 9048 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.

 

அவிநாசி தொகுதியின் 4 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் தனபால் தனபால் 14939 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜு 10031 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon