--- --:--:-- --

பாஜக பிரசாரத்தில் சிதம்பரம் மருமகள் படம்… காங்கிரஸ் கண்டனம்!

Srinithi

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மருமகளான, நாட்டியக்கலைஞர் ஸ்ரீநிதியின் படத்தைப் பயன்படுத்தி தாமரை மலரட்டும் என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம்; காங்கிரஸ் எம்.பி.ஆக உள்ளார். இவரது மனைவி ஸ்ரீநிதி, பரத நாட்டியக்கலைஞர். சமீபத்தில், பரதநாட்டியம் ஆடும் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி படத்தை தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த படம், 10ஆண்டுகளுக்கு முன்பு, திமுக தலைவர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘செம்மொழி’ பாடலுக்கு ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டியம் ஆடிய புகைப்படமாகும். இந்த படத்தை அவரது அனுமதியில்லாமல் எடுத்து பாஜக தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டது.

 

தனது புகைப்படத்தை, பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது மிகவும் அபத்தமானது என்று கார்த்தி சிதம்பரத்தின் மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தாமரை என்றும் மலராது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon