தங்கம் விலை இறங்குமுகம்! சவரனுக்கு 608 ரூபாய் சரிந்தது!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 608 குறைந்து, ரூ.34,128 என்ற என்ற விலைக்கு விற்பனையாகிறது. மீண்டும் தங்கம் விலை குறைந்ததால், பொதுமக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
பொதுவாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கொண்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. எனினும் சமீப காலமாக தங்கத்தின் விலை இறங்குவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலையேற்றத்தைக் கண்ட தங்கம் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரியத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,266-க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை ரூ.1.60 சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது. திடீரென சவரனுக்கு ரூ.600க்கும் மேல் தங்கம் விலை குறைந்ததால், அதில் முதலீடு செய்வோர் உற்சாகமடைந்துள்ளனர்.





