--- --:--:-- --

கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இலவசம் என அறிவித்த கேரள அரசு..!

8

கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இலவசம் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

 

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் சூழலில் கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

 

மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.

 

அந்த வகையில் தடுப்பு மருந்தும் இலவசம் என அறிவித்ததும் சிகிச்சைக்கான ஒரு பகுதியே என்று விளக்கமளித்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon