--- --:--:-- --

கடைசியாக தனது தாயிடம் செல்போனில் பேசிய நடிகை சித்ரா..!

7

மகளுக்கும் தனக்கும் எந்தவித வாக்குவாதமும் நடக்கவில்லை என்று சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் சித்ராவின் தாயார் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். அவர்களிடம் சித்ரா தற்கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடந்தது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது மகள் சித்ரா கடைசியாக தன்னிடம் தான் பேசினார் என்றும் அவரது கணவர் குடும்பத்தினர் மன அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon