--- --:--:-- --

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனைவி தற்கொலை..!

2

ன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனமுடைந்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

வட்டவிலையை சேர்ந்த ரூபன், நந்தினி தம்பதிக்கு ஒன்றரை வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்து நிறைய சம்பாதிக்கலாம் என தோழிகள் கூறியதை கேட்ட நந்தினி கணவரிடம் கேட்டு அடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே நந்தினி காசை தண்ணீர் போல செலவு செய்யும் குணாதிசயம் கொண்டவர் என்பதால் பணம் தர மறுத்ததாக சொல்லப்படுகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு நடந்த நிலையில் நந்தினி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon