--- --:--:-- --

பி.இ., பி.டெக் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..!

4

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்தது.

 

தொடர்ந்து மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. சில மாணவர்கள் சரியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டு இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

 

Leave a Reply

Right Menu Icon