அனல் பறக்கும் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் போஸ்டர்கள்..!
வேலூரில் ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களால் தங்கள் தலைவர்களை அரசியலுக்கு அழைத்து கொண்டு உள்ளனர்.
மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை சந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லனா எப்பவுமே இல்லை என ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் விஜயை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் புரட்சித்தலைவரின் மறுபிறவியே, 2021 தமிழகத்தை ஆழப்போவது நீயேஎன விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் அங்கு அனல் பறக்கிறது.







