--- --:--:-- --

“ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல!!”முதல்வருடனான சந்திப்புக்குப் பின் மருத்துவ குழுவினர் தகவல்!!

4634

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும் ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டியதில்லை எனவும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 3 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளையுடன் முடிவடைய உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் வீரியமாக உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் தொடர்வதா? அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பின், மருத்துவ குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம். அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 

சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது.

 

தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

 

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும்.

 

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்து விட்டது. சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது.

 

ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. எனவே அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.பொதுப் போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. எனவே பொது போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

 

கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளோம் என மருத்துவ குழுவினர் த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon