சேலத்தில் ஆட்டோ ஓட்டுனரிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோ
சேலத்தில் ஆட்டோ ஓட்டுனரிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர் கணேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆட்டோவை வழிமறித்து சீருடை அணியாமலும், செல்போனில் பேசியபடியும் ஆட்டோவை ஓட்டியதாக கூறி ஓட்டுனரிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




