--- --:--:-- --

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகர் பாக்யராஜ் வருத்தம்

10

பெண்கள் பற்றி தான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார்.

 

பொள்ளாச்சி விவகாரம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக நடிகர் பாக்யராஜுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்பு நடிகர் பாக்கியராஜ் ஆஜரானார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ் தான் கூறிய கருத்து பெண்களை இழிவு படுத்த அல்ல என்றும் தான் எப்போதும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது கிடையாது என்றும் கூறினார். பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த கருத்தை கூறியதாக பாக்கியராஜ் தெரிவித்தார் .

 

மேலும் தமது கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டனர் என்றும் அவர்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். தமது பதிலை ஏற்றுக் கொண்ட விசாரணை ஆணையம் தம்மை விடுவித்ததாக பாக்கியராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon