சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜபாண்டி.
இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று ப்ளு டுத் விலைகளை கேட்டுள்ளார். ஆன்லைனில் குறைந்த விலையில் விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி பேசும்போது கடை உரிமையாளர் முத்துவேல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் இணை ஆணையர் அலுவலகத்தில் செல்போன் கடை உரிமையாளர் முத்துவேலு புகார் அளித்ததையடுத்து உதவி ஆய்வாளர் ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - தி.மு.க கூட்டணி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து
தி.மு.க கூட்டணிக்கு பெங்களூரு புகழேந்தி ஆதரவு..!
ரஜினியை மிரட்டியதா தி.மு.க? ஆதவ் அர்ஜுனா கருத்து வெறும் கற்பனை - திருமாவளவன் பதில்






