எந்த ஆசைக்காக தமிழ்நாட்டின் சுயமரியாதையை தாரை வார்த்தீர்கள் ஸ்டாலின்? காங்கிரஸ் எம்.பி கேள்வி
அன்புள்ள ஸ்டாலின் அவர்களே, மசோதாவின் பிரிவு 4, 5 & 6-ஐ படித்துப் பாருங்கள் அது நமது அரசியலமைப்பிலிருந்து ‘1971 census’ என்ற வார்த்தைகளையே நேரடியாக நீக்குகிறது! பிரிவு 334A-ன் கீழ் பெண்களுக்கான இடஒதுக்கீடு வெறும் 15 ஆண்டுகளில் காலாவதியாகும் போது, 850 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தை 2051 வரை முடக்கி வைக்க அறிவாலயம் வாக்களித்துள்ளது.
வடஇந்தியாவில் மட்டுமே 430+ இடங்களை பா.ஜ.க கைப்பற்றிவிட்டால், திராவிடக் குரலை ஆர்.எஸ்.எஸ். ஏன் கேட்கப் போகிறது? வெறும் 20 பயனில்லாத கூடுதல் நாற்காலிகளுக்காக தமிழ்நாட்டின் சுயமரியாதையை எந்த ஆசைக்காக தாரை வார்த்தீர்கள்? என்று காங்கிரஸ் எம்.பி குன்வர் டேனிஷ் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




