தொகுதி மறுவரையறை மசோதா – நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிக்கும் திமுக
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை இன்று தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாடு எதிரானது அல்ல என்றும், ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்றும் கட்சி தெரிவித்துள்ளது.தமிழகத்தின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பங்கு 7.18 சதவீதமாக உள்ளது. இந்தப் பங்கு எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது என்பதையும் திமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு வரவிருக்கும் நாடாளுமன்ற விவாதங்களில் முக்கியத்துவம் பெறும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




