வெளியான குரூப் 2 ஹால் டிக்கெட்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ பிரிவில் மொத்தம் 821 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 821 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க 38 மாவட்டங்களில் இருந்து பல லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வு வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இதற்கான ஹால் டிக்கெட் தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘Hall Ticket Download’ அல்லது ‘One Time Registration (OTR)’ பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். அதில், தங்கள் OTR Login ID மற்றும் Password அல்லது Application Number மற்றும் பிறந்த தேதியைப் உள்ளிடவும்.
பின்னர் திரையில் தோன்றும் குறியீட்டை (Captcha) நிரப்பி Submit பொத்தானை அழுத்தவும். இதன் பிறகு தங்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து அச்சு (Print) எடுத்துக்கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




