--- --:--:-- --

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

3

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் நிலையில், 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

 

அதேபோல, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

ஏனைய தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon