அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று பேரணி..!
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. தமிழக பாஜ., முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கி உள்ளார்; விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார்.
இதனிடையே, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில், மாதம் ஒரு சமூகப்பணி என மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம், தமிழகம் முழுதும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.இம்மாதம் முழுதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில், கன்னி யாகுமரி, துாத்துக்குடி கடற்கரைகளிலும், மதுரை வைகை ஆற்றிலும், அண்ணாமலை தலைமையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று மாலை 3:00 மணிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடக்கும் பேரணியில், அண்ணாமலை உரையாற்றுகிறார். நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




