--- --:--:-- --

ஜூலை மாதம் மின் கட்டணம் இருமடங்காக உயர்வு..!

02

வீடுகளுக்கு அதிகளவில் மின் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாடுகள் எழுந்த நிலையில் கள ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.

 

 

இந்நிலையில், அதிக மின் கட்டண வித்தியாசம் இருக்கும் வாடிக்கையாளர்களின் மின் நுகர்வு விவரங்களை மறு ஆய்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளின் மின் கட்டணத்தில் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்துள்ள மின் வாரியம், இது குறித்து விசாரணை நடத்தி ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon