அது அரசா? இல்லை தரிசா? த.வெ.க-வை விமர்சித்த சீமான்
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருசி நாசமாக விடுவதா? உணவு தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா? உணவுத் தானியங்களைக் கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாது என்றால் அது அரசா? இல்லை தரிசா? எனும் கேள்வி எழுகிறது.
உணவு தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டடங்களை உருவாக்கி, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என த.வெ.க அரசை வலியுறுத்துவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.





