மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்: அன்புமணி பயணம்
கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேகதாது அணை தடுப்போம் காவிரி காப்போம் என்ற முழக்கத்துடன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார்.
மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து, காவிரி நதியின் நீர்வரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது.





