--- --:--:-- --

நாட்களில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை..!

02

சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை ஆன்லைனில் விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே பெறப்பட்டு வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்து ஆவணங்களைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது.

 

 

இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய் மக்கள் விரும்பிய சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தர வேண்டும் என்பதன் அடிப்படையில் துறை வாரியாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

 

வருவாய்த்துறையில் என்னென்ன பணிகள் தேவை, விரைந்து மக்களுக்கு செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடைபெறுகிறது. குறிப்பாக மக்களுக்குத் தேவை ஜாதி சான்றிதழ். மக்களுக்கு விரைந்து கிடைப்பதற்கு ஏதுவாக இன்றைய தினம் இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon