--- --:--:-- --

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

3

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. தொடர்ந்து தற்போது மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

 

 

ஓராண்டுக்கு தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், மத்திய நிதியமைச்சகம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

 

இதன் பிரதிபலிப்பாக தங்கம் விலை கடந்த 13ஆம் தேதி அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.அதன் படி, 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.14,750க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,310க்கும், ஒரு சவரன் ரூ.98,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon