--- --:--:-- --

எம்.டி.சி பேருந்துகளை இனி எளிதாக கண்டறியலாம்..!

10

பேருந்து பயணிகள் தங்கள் பயணம் செய்யும் பேருந்து குறித்த தகவல்களை விரைவாக மற்றும் எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக (MTC) பேருந்துகளைக் கண்காணிப்பது குறித்து புதிய செயலியை அறிமுகப்படுத்த உ்ளளது. இதற்காக எம்.டி.சி சென்னை (MTC Chennai) என்ற புதிய மொபைல் செயலி மற்றும் பேருந்து நிறுத்தங்களில் ‘பயணிகள் தகவல் அமைப்பு’ (PIS) காட்சிப் பலகைகளை அறிமுகப்படுத்த எம்.டி.சி (MTC) தயாராகி வருகிறது.

 

 

சென்னை அறிவுசார் போக்குவரத்து அமைப்பு (CITS) திட்டத்தின் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் புதிய அமைச்சரவை முழுமையாகப் பொறுப்பேற்ற பிறகு, அடுத்த 10 நாட்களுக்குள் புதிய செயலி மற்றும் ‘பயணிகள் தகவல் அமைப்பு ஆகிய இரண்டையும் நாங்கள் அறிமுகப்படுத்துவோம்” என்று எம்.டி.சி மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த திட்டங்களின் மூலம் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் இருந்து நேரடித் தகவல்களை பெறுவதால், இந்தச் செயலி மிகவும் நம்பகமானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும். அதேபோல் தற்போது உள்ள சென்னை பஸ் (Chennai Bus) செயலிக்கு மாற்றாக வரும் இந்த செயலி, பயணிகள் கூறிய (குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின்) கருத்துக்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் தாழ்தள பேருந்துகளை (low-floor buses) எளிதாகக் கண்டறியலாம்.

 

இந்த புதிய செயலியில் சாதாரண, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், தாழ்தள, மின்சார ஏசி பேருந்து என அனைத்து வகை பேருந்துகளையும் வெறும் தடம் எண்ணை (route number) மட்டும் பதிவு செய்து அனைத்து தகவல்களையும் பெறலாம். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய திசையில் வரும் பேருந்துகளைக் கண்டறியவும், சரியான ஏறும் இடத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும் இந்த அம்சம் உதவும். அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளும் வகையில், குறிப்பாகப் பெண் பயணிகளுக்காக பாதுகாப்பு வசதி (SOS) இதில் இணைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்மார்ட்போன் வசதி இல்லாத பயணிகளுக்காக, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முக்கியப் பணிமனைகளில் 500 பயணிகள் தகவல் காட்சிப் பலகைகளை (PIS) எம்.டி.சி (MTC) நிறுவியுள்ளது. குறைவான பேருந்துகள் வரும் நிறுத்தங்களில் 2-வரி பலகைகளும், அதிகப் போக்குவரத்து உள்ள இடங்களில் 4-வரி பலகைகளும் இருக்கும். கிளாம்பாக்கம், கோயம்பேடு (CMBT), அண்ணா சதுக்கம், பெரம்பூர் மற்றும் வடபழனி போன்ற முக்கியப் பேருந்து நிலையங்களில் 10-வரி கொண்ட பெரிய தகவல் பலகைகள் அமைக்கப்படும். இவை பேருந்து வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் இரண்டையும் காட்டும்.

 

தற்போது இந்தச் சாதனங்கள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன. மேலும், எதிர்காலத்தில் எம்.டி.சி சென்னை (MTC Chennai) செயலி மூலமாகவே பயணச்சீட்டு (In-app ticketing) பெறும் வசதியையும், ரெட் பஸ் (RedBus) மற்றும் அபி பஸ் (AbhiBus) போன்ற செயலிகள் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தையும் எம்.டி.சி பரிசீலித்து வருகிறது.

 

 

இதில், ஏசி பேருந்து (AC Bus), வெளிர் பச்சை (Light green), எக்ஸ்பிரஸ் (Express), சாம்பல் நிறம் (Grey), சாதாரண பேருந்து (Ordinary Bus), சிவப்பு (Red), டீலக்ஸ் பேருந்து (Deluxe Bus), மஞ்சள் (Yellow), ஏசி மின்சார பேருந்து (AC EV Bus), நீலம் (Blue), மின்சார பேருந்து (EV Bus) பச்சை (Green), தாழ்தள பேருந்து (LF Bus), அடர் பச்சை (Dark green), சிறிய பேருந்து (Small Bus), பழுப்பு (Brown) உள்ளிட்ட நிறங்களில் கண்காணிப்பு பலகைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon