--- --:--:-- --

சென்னையில் இன்று வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை கடக்கும்..!

1

மிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தும் எனக் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 இடங்களிலும், புதுச்சேரியிலும் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. திருச்சி, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கும், மதுரை நகரம், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய இடங்களில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கும் வெப்பநிலை பதிவானதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் காரணத்தால், ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon