--- --:--:-- --

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

2

மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் நாளே நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.11,635க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.93,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon