--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை..?

1

மிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

அதேநேரம், அன்றைய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியை தாண்டி பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon