மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000க்கும் மேல் குறைந்தது. காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ( மார்ச் 20) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.111,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,640க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





