இன்று தமிழகம் வருகிறார் பிரதமர்..!
சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் சூழலில், இரண்டு நாள் பயணமாக இன்று (பிப். 28) தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை காலை புதுச்சேரி சென்று நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மதுரை வருகிறார். சென்னை, புதுச்சேரி, மதுரை- இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி





