விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேச மாட்டேன்: அண்ணாமலை
விஜய் அரசியல் கருத்துக்குப் பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாகக் கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.
அரசியலுக்கு வந்துவிட்டால் இதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைத் தோண்டுவார்கள். இது எல்லாத் தலைவருக்குமே நடந்ததுதான்.
விஜய் அரசியலுக்கு வரும் பொழுதே இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார்; இதை அவர் கடந்து தான் போக வேண்டும் என சென்னையில் அண்ணாமலை பேட்டயில் தெரிவித்துள்ளார்.





