மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,940க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






